பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித் தொகை மாற்றுத் திறனாளி அழைப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஆணைப்படி நடப்பு நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ. 1000; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ. 3000 ; 9ம்

கடலுார் : மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஆணைப்படி நடப்பு நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ. 1000; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ. 3000 ; 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ. 4000 ; இளநிலை(யுஜி) ரூ. 6000; முதுநிலை(பிஜி) ரூ. 7000 ரூபாயும் வழங்கப்படுகிறது.எனவே கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் (அனைத்துப் பக்கங்களும்), ரேஷன் கார்டு நகல், சென்ற ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று, வங்கி புத்தக நகல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து நகல்களையும் இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், 112 தரை தளம், கலெக்டர் அலுவலக வளாகம், கடலுார்-607001 என்ற முகவரிக்கு நேரில் சென்று வரும் 30.11.2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட அலுவலகத்தினை (அலுவலக தொலை பேசி எண்:-04142-284415, தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X