புதுச்சேரி : 'என்.ஆர் காங்.,- பா.ஜ.,கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும்படி உள்ளது' என என்.ஆர்., இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்..
அவரது அறிக்கை:முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில்,விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.ரேஷன் கடை திறப்பு ,இலவச அரிசி திட்டத்திற்கு 197.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு புதுச்சேரி மக்களை மகிழ செய்துள்ளது.கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் என அறிவித்து, நல்லாட்சியின் மைல்கல்லாக அமைந்துள்ளது. ஆதிதிராவிடர் திருமண நிதிஉதவி 70 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற்கத் தக்கது.புதிதாக வரிகள் இல்லாமல், என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும்படி உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE