கடை வாடகை தள்ளுபடி செய்ய வியாபாரிகள் சங்கம் கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடை வாடகை தள்ளுபடி செய்ய வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

Added : ஆக 29, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி பஸ் நிலைய வியாபாரிகள் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.,) நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் கதிரேசன், செயலர் தண்டபாணி தலைமை தாங்கினர். சங்கத்தின் எதிர்கால செயல்பாடு குறித்து ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலர் சேதுசெல்வம் பேசினார்.சங்கத் துணைத் தலைவர் ஹரிஹரன், துணை செயலர் இன்பமொழி தனசீலனம், பொருளாளர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கொரோனா

புதுச்சேரி : புதுச்சேரி பஸ் நிலைய வியாபாரிகள் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.,) நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் கதிரேசன், செயலர் தண்டபாணி தலைமை தாங்கினர்.

சங்கத்தின் எதிர்கால செயல்பாடு குறித்து ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலர் சேதுசெல்வம் பேசினார்.சங்கத் துணைத் தலைவர் ஹரிஹரன், துணை செயலர் இன்பமொழி தனசீலனம், பொருளாளர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டிருந்ததால், வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், கடைகளில் இருந்து தற்காலிக காய்கறி கடைகளுக்கு மின்சார இணைப்பு வழங்கியதால், அதற்கான மின் கட்டணத்தை நகராட்சி நிர்வாகமே செலுத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X