பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அதிகளவில் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் பெரியார் அரசு கல்லூரியில் 2021--22ம் கல்வியாண்டு முதலாமாண்டில் 1,329 மாணவ, மாணவிகள்சேர்க்கப்பட உள்ளனர்.அதற்காக, 9,671 விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் பெறப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு, கடந்த 25ம் தேதி முதல்
 கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

கடலுார் : கடலுார் அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அதிகளவில் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் பெரியார் அரசு கல்லூரியில் 2021--22ம் கல்வியாண்டு முதலாமாண்டில் 1,329 மாணவ, மாணவிகள்சேர்க்கப்பட உள்ளனர்.அதற்காக, 9,671 விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் பெறப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு, கடந்த 25ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது.நேற்று அனைத்து அறிவியல் பாடத்திற்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பெற்றோருடன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்கள் பலர் முகக்கவசம் அணியாததால், கல்லுாரி பேராசிரியர்கள் எச்சரித்து, முகக்கவசம் அணிந்த பிறகே அனுமதித்தனர்.மாணவர்கள் அதிகளவில் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X