பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு வழங்கும் முகாம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, பழங்குடியினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க, கடலுார் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ஜெயசெல்வி முன்னிலை வகித்தார். முகாமில், கடலுார் தாலுகா பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டு பெற
 ரேஷன் கார்டு வழங்கும் முகாம்

கடலுார் : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, பழங்குடியினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க, கடலுார் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ஜெயசெல்வி முன்னிலை வகித்தார். முகாமில், கடலுார் தாலுகா பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தனர். பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் நடந்தன. தனி வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், வேப்பூர் தாசில்தார் அலுவலகங்களிலும், பெண்ணாடம், தொரப்பாடி உள்ளிட்ட 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடம் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் ரோகிணிராஜ் தலைமை தாங்கினார்.சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுதாகர், வி.ஏ.ஓ., இளஞ்செழியன், ரேஷன் கடை விற்பனையாளர் ஜெயபால் பங்கேற்றனர். புதிய ரேஷன் கார்டு மற்றும் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான பழங்குடி இன மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X