பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர கிராமங்களில் மின்தடை குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அருகே நாணமேடு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.கடலுார் அருகே உள்ளது நாணமேடு கிராமம். இக்கிராமத்தை சுற்றி உச்சிமேடு, சரஸ்வதி நகர், தியாகுநகர், சுபா உப்பலவாடி உட்பட ஏராளமான புதிய நகர்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு, நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம்

கடலுார் : கடலுார் அருகே நாணமேடு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

கடலுார் அருகே உள்ளது நாணமேடு கிராமம். இக்கிராமத்தை சுற்றி உச்சிமேடு, சரஸ்வதி நகர், தியாகுநகர், சுபா உப்பலவாடி உட்பட ஏராளமான புதிய நகர்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு, நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. மழை பெய்யும் போது , இக்கிராமங்களில் மின் தடை ஏற்படுகிறது.கடற்கரை கிராமங்களாக இருப்பதால் இன்ஸ்லேட்டர்கள் வெடித்து மின்தடை ஏற்படுகிறது.

மழை நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவுக்கு மேல் மின் சப்ளை கொடுக்கின்றனர். இதன் பிறகு மோட்டார்களை இயக்குவது தடைபட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.அதேப்போல நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின் தடை ஏற்பட்டது. பின், இரவு 12 மணிக்கு பிறகு மின்சாரம் வந்தது. நேற்று மாலை 5 மணிக்கு பெய்த மழையினால் மின்சாரம் தடைபட்டது. அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X