பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மியாட் இதய சிகிச்சை நிபுணர் கடலுாரில் இன்று மருத்துவ ஆலோசனை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் விஜய் பாலாஜி, இன்று 29ம் தேதி கடலுாருக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.இந்த ஆலோசனை முகாம், கடலுார் ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம், கடலுார் என்ற முகவரியில், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்கிறது. முகாமில் மார்பு வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல்,

கடலுார் : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் விஜய் பாலாஜி, இன்று 29ம் தேதி கடலுாருக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

இந்த ஆலோசனை முகாம், கடலுார் ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம், கடலுார் என்ற முகவரியில், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்கிறது. முகாமில் மார்பு வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல், சோர்வு, உணர்வின்மை, தலைச்சுற்றல், கை,கால், தாடைகளில் அதிகரிக்கும் வலி, கால்களில் வீக்கம், படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறி இருப்பவர்கள் ஆலோசனை பெறலாம்.மேலும், இதய நோய், திடீர் இதய நோய் மரணங்கள் ஏற்பட்ட குடும்ப வரலாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் வரலாம்.

ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டெண்டிங், பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், அன்யுரிசம் சிகிச்சை, இதய வால்வு பழுது மற்றும் மாற்றம் செய்து கொண்டவர்கள், இரண்டாவது கருத்து அல்லது வழக்கமான இதய சோதனைக்கும் பங்கேற்கலாம். முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்- ரூ. 200. முன் பதிவுக்கு, 78240 60146,98412 68500 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X