பொது செய்தி

இந்தியா

அதிக நிதி பெற்றது பாராட்டுக்குரியது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'மத்திய அரசிடம் புதுச்சேரிக்கு அதிக நிதி பெற்றது பாராட்டுக்குரியது' என, அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறி உள்ளார்.அவரது அறிக்கை:கடந்த காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையை செம்மைப்படுத்த, எப்போதும் இல்லாத வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ. 742 கோடி

புதுச்சேரி : 'மத்திய அரசிடம் புதுச்சேரிக்கு அதிக நிதி பெற்றது பாராட்டுக்குரியது' என, அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையை செம்மைப்படுத்த, எப்போதும் இல்லாத வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ. 742 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இலவச அரிசிக்காக ரூ.197 கோடி ஒதுக்கீடு செய்து, மாதந்தோறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது உறுதிபடுத்தப் பட்டுள்ளது.தடையற்ற மின் விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அதற்காக போதிய நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கத் தக்கது.உப்பளத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உப்பனாறு கால்வாயை சீரமைக்கவும், பல் வேறு அரசு நிறுவன ஊழியர்களுக்கு இரண்டு மாத நிலுவை ஊதியம் வழங்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதிக நிதியை புதுச்சேரி மாநிலத்திற்கு பெற்று வந்தது பாராட்டுக்கு உரியது.தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த அனைத்து தரப்பு மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வருக்கு அ.தி.மு.க., சார்பில் பாராட்டுக்கள். சிறப்புமிக்க பட்ஜெட்டை தி.மு.க., - காங்., கட்சிகள் குறை கூறுவது ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X