கிரைம் செய்திகள்.

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மகள் மாயம்: தாய் புகார் பெண்ணாடம்: வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் நிஷா, 18; இவர் பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரில் உள்ள உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு கடந்த 25ம் தேதி வந்தார். பின், 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம்

மகள் மாயம்: தாய் புகார்

பெண்ணாடம்: வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் நிஷா, 18; இவர் பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரில் உள்ள உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு கடந்த 25ம் தேதி வந்தார். பின், 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்ற 3 பேர் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவலறிந்த இன்ஸ்பெக்டர் அசோகன் சப் இன் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற நெல்லிக்குப்பம் அண்ணாநகர் எழிலரசன்,28; பி.என்.பாளையம் முகிலன்,24; பில்லாலி பிரதீப்,27; ஆகியோரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சாலையோரம் இறந்து கிடந்த பெண்
காட்டு மன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோடு மாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் 50 வயதுள்ள பெண் இறந்து கிடந்தார். காட்டுமன்னார்கோவில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சென்று பெண் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்தனர். இறந்த பெண் சிதம்பரம் அடுத்த பண்ணப்பட்டு செல்வக்குமார் மனைவி ராஜலட்சுமி, 50; கணவர் இறந்து விட்டார். தனியாக வசித்த ராஜலட்சுமிக்கு மன நலம் பாதித்து சில மாதங்களாக நகரில் திரிந்தார். தற்போது உடல் நிலை பாதித்து இறந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் திருப்பூரில் வேலை செய்கிறார்கள். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த முடப்பள்ளி கிராமத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற முடப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பு,36; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பெண்ணை வற்புறுத்தியவர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சொரத்துார் மோவன் தெருவை சேர்ந்தவர் சுதாகர்,38; இவர் கடந்த 27 ம்தேதி இதே ஊரை சேர்ந்த கணவனை இழந்து தனியாக வசிக்கும் 36 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசைக்கிணங்க வற்புறுத்தினார். மறுத்ததால் கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சுதாகரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X