கடலுார் : பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:மத்திய அரசால் பட்டியலிட்ட கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்படிவம் www.cuddalore.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளை 30ம் தேதிக்குள் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள், தகுதியான விண்ணப்பங்களை, வரும் 30.11.2021 தேதிக்குள் இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE