பொது செய்தி

இந்தியா

நானும் ஒரு விவசாயியின் மகன்: தலைமை நீதிபதி

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் தலைமைப் பொறுப்பேற்ற பின் பல அதிரடி விஷயங்களை செய்து வருகிறார்.மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமைகளை செய்யாத போது கண்டித்தும், ஒழுங்காக செய்தால் பாராட்டியும் வருகிறார். தலைமை நீதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் குடியேறும் முன் திருப்பதி பண்டிதர்களை வைத்து யாகம் செய்தார்.

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் தலைமைப் பொறுப்பேற்ற பின் பல அதிரடி விஷயங்களை செய்து வருகிறார்.



latest tamil news


மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமைகளை செய்யாத போது கண்டித்தும், ஒழுங்காக செய்தால் பாராட்டியும் வருகிறார். தலைமை நீதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் குடியேறும் முன் திருப்பதி பண்டிதர்களை வைத்து யாகம் செய்தார். ஏழுமலையான் மீது அதீத பக்தி உடையவர்.புதிய பங்களாவில் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களை தன் பங்களாவிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். தோசை உள்ளிட்ட நம் ஊர் உணவுகள் தான் இந்த விருந்தில் பரிமாறப்பட்டன.


latest tamil news


ரமணாவின் அன்பால் அனைவரும் நெகிழ்ந்து போயினர்.'இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும் எங்களை மதித்து வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததே இல்லை' என்கின்றனர் உச்ச நீதிமன்ற பணியாளர்கள். 'நான் ஒரு விவசாயின் மகன். சாதாரண நிலையிலிருந்து இந்த பதவிக்கு வந்தேன். எனவே அனைவரது கஷ்டமும் எனக்கு தெரியும்' என்கிறார் தலைமை நீதிபதி

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஆக-202115:42:32 IST Report Abuse
Vena Suna அருமை ஆனால் ஒரு சந்தேகம் உச்சநீதிமன்ற பணியாளர்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு அவருக்கு எங்கிருந்து காசு வந்தது
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஆக-202114:09:22 IST Report Abuse
அசோக்ராஜ் விவசாயி மகர் -னு சொல்றவங்க எல்லாருமே அரசியல் வாதிகள் என்று தான் இந்திய அகராதி குறிப்பிடுது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஆக-202113:48:04 IST Report Abuse
r.sundaram நீங்கள் விவசாயியின் மகன் என்றால், டெல்லியில் போராடும் விவசாயிகளை கூப்பிட்டு பேசலாமே ? ஏன் இந்த வேண்டாத போராட்டம்? அரசின் சட்டத்தை, அதன் நோக்கத்தை அவர்களுக்கு புரிய வைப்பது உங்கள் கடமை அல்லவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X