இந்தியா

போர்ட்டிஸ் ஹெல்த்கேர் தகவல் மையம் திறப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் போர்ட்டிஸ் ஹெல்த்கேர் புதுச்சேரி கிளை தகவல் மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.இந்தியாவில் உள்ள பல்நோக்கு தொடர் சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக போர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை உள்ளது.இதன் தகவல் மையம், புதுச்சேரி - கடலுார் ரோடு, முதலியார்பேட்டை ரோடியர் மில் அருகே அமைக்கப் பட்டுள்ளது.இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. தகவல்
 போர்ட்டிஸ் ஹெல்த்கேர்  தகவல் மையம் திறப்பு

புதுச்சேரி : முதலியார்பேட்டையில் போர்ட்டிஸ் ஹெல்த்கேர் புதுச்சேரி கிளை தகவல் மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இந்தியாவில் உள்ள பல்நோக்கு தொடர் சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக போர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை உள்ளது.இதன் தகவல் மையம், புதுச்சேரி - கடலுார் ரோடு, முதலியார்பேட்டை ரோடியர் மில் அருகே அமைக்கப் பட்டுள்ளது.இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. தகவல் மையத்தை முதல்வர் ரங்கசாமி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.போர்டிஸ் ஹெல்த்கேர் மண்டல இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாண்டே தலைமை தாங்கினார்.அதைத் தொடர்ந்து நடைபெற்ற சுகாதார முகாமில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

இதுதொடர்பாக போர்டிஸ் ஹெல்த்கேர் மண்டல இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாண்டே கூறியதாவது;இதயம், நுரையீரல், நரம்பியல், இரைப்பைகுடல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சென்னை போர்டிஸ் மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்க இந்த தகவல் மையத்துக்கு வருவர்.பன்னாட்டு தரத்தில் மருத்துவ சேவைகளை பெற மெட்ரோ நகரங்களுக்கு செல்லும் அதிக அளவிலான மக்களுக்கு, குறிப்பாக புதுச்சேரி புறநகர் பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த மையம் வரப்பிரசாதமாக விளங்கும்.இவ்வாறு சஞ்சய் பாண்டே கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X