பொது செய்தி

இந்தியா

வரியில்லா பட்ஜெட்; பா.ஜ., பாராட்டு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதை பா.ஜ., வரவேற்பதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறி உள்ளார்.அவரது அறிக்கை;பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கிதற்கு பா.ஜ., சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி, பாட்கோவில் மாணவர்கள் பெற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதை பா.ஜ., வரவேற்பதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை;பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கிதற்கு பா.ஜ., சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி, பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி, பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு, விவசாயம், மகளிர் மற்றும் மாணவர்களுக்கான சலுகைகள் என மக்கள் வரவேற்கும் விதத்தில் பட்ஜெட் அமைந்துள்ளது.

காங்., ஆட்சியில் இடைகால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்த நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது ஆட்சியின் முழு வெற்றியை வெளிப்படுத்துகிறது.வேளாண்மை, கல்வி, விவசாயம், சுகாதாரம், மாணவர்கள், மகளிர், முதியோர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் அரசின் திட்டங்களை முழுமையாக அமல்படுத்தும்.பொதுமக்கள் மற்றும் பா.ஜ., கட்சியின் சார்பாக புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை வரவேற்று, பாராட்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X