சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து மர்ம நபர்கள் திருட முயற்சி நகை, பணம் இல்லாததால் ஏமாற்றம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி, ஆக.29-கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து திருட முயன்ற மர்ம நபர்கள், பீரோவில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கள்ளக்குறிச்சி, ராஜா நகரை சேர்ந்தவர் ஜோதி மனைவி ராஜரத்தினம், 47. இவர் தனது வீட்டு மாடியில் தங்கியுள்ளார். தரைதளத்தில் விஜயராகவன் என்பவர் வாடகைக்கு தங்கியிருக்கிறார்.ராஜரத்தினம் கடந்த ஒரு வாரத்திற்கு முன், சென்னையில் டாக்டராக

கள்ளக்குறிச்சி, ஆக.29-

கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து திருட முயன்ற மர்ம நபர்கள், பீரோவில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கள்ளக்குறிச்சி, ராஜா நகரை சேர்ந்தவர் ஜோதி மனைவி ராஜரத்தினம், 47. இவர் தனது வீட்டு மாடியில் தங்கியுள்ளார். தரைதளத்தில் விஜயராகவன் என்பவர் வாடகைக்கு தங்கியிருக்கிறார்.ராஜரத்தினம் கடந்த ஒரு வாரத்திற்கு முன், சென்னையில் டாக்டராக பணிபுரியும் தனது மகன் மனோவை பார்ப்பதற்காக, வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்த விஜயராகவன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு, பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து, வீட்டின் உரிமையாளர் ராஜரத்தினத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.அப்போது, நகைகளை வேறு இடத்தில் வைத்திருப்பதாக ராஜரத்தினம் தெரிவித்துள்ளார். அதன்படி, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, நகை இருப்பதை கண்டு நிம்மதியடைந்தனர். இதனால், பீரோவில் நகை, பணம் ஏதுமில்லாததால் திருட வந்த மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X