பொது செய்தி

இந்தியா

புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை: ஆந்திரா நபர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை செய்த, ஆந்திராவை சேர்ந்த கஞ்சா விற்பனை கும்பல் தலைவனை நக்சல் பகுதியில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.புதுச்சேரி, உழவர்கரை கம்பன் நகரில் உள்ள அபார்ட்மெண்ட்டில் கஞ்சா விற்பனை நடப்பது தெரிய வந்தது. அங்கு சோதனை நடத்திய ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார், ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 1,700
 புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை: ஆந்திரா நபர் கைது

புதுச்சேரி : புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை செய்த, ஆந்திராவை சேர்ந்த கஞ்சா விற்பனை கும்பல் தலைவனை நக்சல் பகுதியில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

புதுச்சேரி, உழவர்கரை கம்பன் நகரில் உள்ள அபார்ட்மெண்ட்டில் கஞ்சா விற்பனை நடப்பது தெரிய வந்தது. அங்கு சோதனை நடத்திய ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார், ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 1,700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ஆந்திரா மாநிலம், விசாகபட்டிணத்தை சேர்ந்த கஞ்சா விற்கும் கும்பலின் தலைவன் ராமராஜ், 55, என்பவரிடம் வாங்கியது தெரிய வந்தது. ராமராஜை பிடிக்க சீனியர் எஸ்.பி., பிரதீக் ஷா கோதாரா உத்தரவிட்டார்.வடக்கு எஸ்.பி., சுபம் கோஷ், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து, கடந்த 23ம் தேதி முதல் ஆந்திராவில் முகாமிட்டு தேடி வந்தனர்.

நக்சல்கள் நிறைந்த பகுதியான தாமராடு கிராமத்தில் ராமராஜ் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதனால், பெத்தபயலு சப் இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையிலான ஆந்திரா போலீசாருடன், புதுச்சேரி போலீசார் தாமராடு கிராமத்திற்கு சென்றனர்.அங்கு, ராமராஜை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து, நேற்று புதுச்சேரி அழைத்து வந்தனர்.ஆபத்தான பகுதியில் துணிச்சலாக கஞ்சா கும்பல் தலைவனை கைது செய்த தனிப்படை போலீசாரை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., பிரதீக் ஷா கோதாரா பாராட்டினார்.வடக்கு எஸ்.பி., சுபம்கோஷ், கஞ்சா விற்பனை கும்பல் தலைவனிடம் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.

ராமராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். ராமராஜ் ஏற்கனவே மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X