பொது செய்தி

இந்தியா

2,000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கர்நாடகாவில் இருந்து வருகை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.அதன் ஒரு கட்டமாக, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடந்த 19ம் தேதி 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

புதுச்சேரி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.அதன் ஒரு கட்டமாக, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடந்த 19ம் தேதி 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைத்தனர்.இரண்டாம் கட்டமாக, நேற்று கர்நாடகா மாநிலத் தில் இருந்து 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1,100 கன்ட்ரோல் யூனிட்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், கலெக்டர் ரிஷிதா குப்தா, சப் கலெக்டர் கந்தசாமி மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில், பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X