பொது செய்தி

தமிழ்நாடு

விடுபட்ட புத்தகங்கள் அனுப்பும் பணி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரிலிருந்து அனைத்து கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும் நிலுவையில் உள்ள பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வரும் செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. இந்த கல்வியாண்டிற்கான அரசின் இலவச பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. சில புத்தகங்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரிலிருந்து அனைத்து கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும் நிலுவையில் உள்ள பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வரும் செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. இந்த கல்வியாண்டிற்கான அரசின் இலவச பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. சில புத்தகங்கள் நிலுவையில் உள்ள நிலையில், விடுபட்ட பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு, இரண்டாம் கட்டமாக அரசின் இலவச பாட புத்தகங்கள் லாரிகள் மூலம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X