வெளியுலகம் அறியாத தாலிபான் தலைவர் புகைப்படம் வெளியீடு

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் முன்னதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து அங்கு கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக காபூல் விமான நிலையத்தில் பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது.இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனை அடுத்து அமெரிக்க அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு

காபூல்: ஆப்கனில் முன்னதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து அங்கு கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக காபூல் விமான நிலையத்தில் பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது.



latest tamil news


இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனை அடுத்து அமெரிக்க அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு மூலகாரணமாக செயல்பட்டவர்கள் தாலிபான்களால் அல்லது ஹக்கினி பயங்கரவாதிகளா என்று அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தாலிபானின் கமாண்டர் பொறுப்பு வகித்து வரும் ஹிபத்துல்லா அக்குன்சாடா புகைப்படம் வெளியாகி உள்ளது.

தாலிபானின் தலைவர் முல்லா ஓமர் மரணத்தை பல்வேறு ஜிகாதி அமைப்புகள் திட்டமிட்டு மறைத்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ஹிபத்துல்லா அக்குன்சாடாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை வெளியுலகத்தால் அறியப்படாத இவரது புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.


latest tamil news


தாலிபான் பல ஆண்டு காலமாக தங்களது தலைவர்களை வெளியுலகுக்குக் காட்டாமல் இருந்து வந்துள்ளது. இதேபோல அப்துல்லாவும் வெளி உலகம், ஊடகம் ஆகியவற்றின் பார்வையிலிருந்தும் மறைக்கப்பட்டவர். விரைவில் அவர் அனைவர் முன்னிலையிலும் தோன்றுவார் என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் சபி அப்துல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
01-செப்-202105:03:24 IST Report Abuse
meenakshisundaram இவனை அமேசான் காட்டில் 'நடு சென்டரில் ' விட்டு விடுங்க ஐயா மார்களே
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
29-ஆக-202117:44:57 IST Report Abuse
jagan சம்சுதீன் சூர்யா அவர்களின் அடுத்தபடம் தாலிபான் பற்றியது.
Rate this:
Cancel
29-ஆக-202116:58:48 IST Report Abuse
அப்பசாமி வெளியுலகத்துக்கு இவரைத் தெரியாது. அதே போல இவனுக்கும் வெளி உலகம் ஒண்ணும் தெரியாது. 13 ம் நுய்ற்றாண்டைத் தாண்டி இன்னும் வெளியே வரலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X