பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் வழிப்பறி பிரபல ரவுடிக்கு 'குண்டாஸ் '

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நெய்வேலி : கடலுார் மாவட்டம், நெய்வேலி வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், 28; இவர்,கடந்த ஜூலை 21ம் தேதி நெய்வேலி பெட்ரோல் பங்க் அருகே சென்றார். அப்போது, இருவர், அவரை வழிமறித்து சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 1000ஐ பறித்துச் சென்றனர்.நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில் நெய்வேலி மேல்வடக்குத்து நடேசன் மகன் வீரமணி, 23;

நெய்வேலி : கடலுார் மாவட்டம், நெய்வேலி வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், 28; இவர்,கடந்த ஜூலை 21ம் தேதி நெய்வேலி பெட்ரோல் பங்க் அருகே சென்றார்.

அப்போது, இருவர், அவரை வழிமறித்து சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 1000ஐ பறித்துச் சென்றனர்.நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில் நெய்வேலி மேல்வடக்குத்து நடேசன் மகன் வீரமணி, 23; இந்திரா நகர் பழனிவேல் மகன் மணிமாறன், 23; ஆகியோர் பணத்தை பறித்துச் சென்றது தெரிந்தது.

இருவரையும் கைது செய்தனர்.கைதான பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி நகர போலீசில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள், தெர்மல் போலீசில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. அவரது குற்ற செயல்களை தடுக்க, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி., சக்திகணேசன் பரிந்துரை செய்தார். கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவுபடி, ரவுடி வீரமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X