பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துவங்க உதவி செய்வதாக கூறி ரூ. 45.90 லட்சம் மோசடி செய்தவர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : தொழில் துவங்க உதவி செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரெய்மன்ட் மனைவி பபியோலா, 40; ரெய்மன்ட் கடந்த 2016 ம் ஆண்டு இறந்து விட்டார். இவரிடம்அதே பகுதியைச் சேர்ந்த சண்முக ஆனந்த், 36; அறிமுகமாகி சாக்லேட் வியாபாரம் செய்வதாகவும், பணம் முதலீடு செய்தால்அதிக

கடலுார் : தொழில் துவங்க உதவி செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரெய்மன்ட் மனைவி பபியோலா, 40; ரெய்மன்ட் கடந்த 2016 ம் ஆண்டு இறந்து விட்டார். இவரிடம்அதே பகுதியைச் சேர்ந்த சண்முக ஆனந்த், 36; அறிமுகமாகி சாக்லேட் வியாபாரம் செய்வதாகவும், பணம் முதலீடு செய்தால்அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினார்.இதனை நம்பி அவரிடம் பபியோலா ரூ. 10 லட்சம் கொடுத்தார்.மேலும், தனது கடன் பிரச்னையை தீர்க்க பபியோலாவிடம் 3 தவணையாக ரூ. 15 லட்சம், 24 சவரன் நகைகளையும்சண்முக ஆனந்த் பெற்றார்.

சில மாதங்கள் கழித்து சண்முக ஆனந்த், அவரது மனைவி ரேவதி ஆகியோர் மகாபலிபுரத்தில் குறைந்த விலையில் மனை விற்கின்றனர். இதனை வாங்கினால் கூடுதல் விலைக்கு விற்கலாம் என கூறினர்.அதன்படி ரேவதி வங்கிக் கணக்கில், பபியோலா கடந்த 28.06.2019 முதல், 5.11.2019 வரை 4 தவணையாக ரூ. 20 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தினார்.

பணத்தை பெற்ற ரேவதி, மனை வாங்கித் தராமல் காலம் கடத்தினார்.தொழில் துவங்க வாங்கிய 10 லட்சம் ரூபாயும், கடனாக பெற்ற ரூ. 15 லட்சம், மனை வாங்கித் தருவதாக கூறி ரூ. 20 லட்சத்து 90ஆயிரம் உட்பட ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் 24 சவரன் நகைகளை திருப்பித் தராமல் தம்பதிஇருவரும் மோசடி செய்தனர்.இது குறித்து கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்தாண்டு டிச., 22ம் தேதி பபியோலா புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிந்து வடக்குத்து கிராமத்தில் சண்முக ஆனந்த்தை கைது செய்து, ரேவதியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X