பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 2 லட்சம் போலி மதுபாட்டில் கடத்திய இரண்டு பேர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் போலி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர்
 ரூ. 2 லட்சம் போலி மதுபாட்டில் கடத்திய இரண்டு பேர் கைது

கடலுார் : புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் போலி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா மற்றும் போலீசார், பண்ருட்டி ரயில்வே கேட்டில் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த (பி.ஒய்.01-ஏ.சி.4950) பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் விரட்டிச் சென்று மடக்கி சோதனை நடத்தினர்.

இதில், 180 மி.லி., அளவில் 1440 மதுபாட்டில்கள், 100 லிட்டர் சாராயம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த முருகன் மகன் பரத் (எ) பரத்குமார், 20; புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த ஆரிய பாளையம் சுதாகர், 32; எனத் தெரிந்தது.புதுச்சேரியில் இயங்கும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி கடலுார் மாவட்டத்தில் விற்க கடத்தி வந்துள்ளனர்.

தமிழகத்தில் விற்கும் மதுபாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரை ஒட்டியதும் தெரிந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நேற்று கைது செய்து, மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.மதுபாட்டில் கடத்திய 2 பேரையும் கைது செய்த போலீசாரை சென்னை மண்டல மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.பி., பெருமாள் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X