சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கடலுார் : புதுச்சேரியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் போலி மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.3புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக, மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா மற்றும்

கடலுார் : புதுச்சேரியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் போலி மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.3

புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக, மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா மற்றும் போலீசார், பண்ருட்டி ரயில்வே கேட்டில் நேற்று அதிகாலைவாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.நிற்காமல் சென்றபி.ஒய்.01-ஏ.சி.4950 பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ காரைவிரட்டிச் சென்று மடக்கி சோதனை நடத்தினர். 180 மி.லி., அளவில் 1440 மதுபாட்டில்கள், 100 லிட்டர் சாராயம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

விசாரணையில்,திருக்கோவிலுாரைச் சேர்ந்த முருகன் மகன் பரத் (எ) பரத் குமார், 20; புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த ஆரியபாளையம் சுதாகர், 32; எனத் தெரிந்தது.புதுச்சேரியில் இயங்கும் போலி மதுதொழிற்சாலையில் குறைந்த விலைக்கு வாங்கி, கடத்தி வந்துள்ளனர். இருவரையும்கைது செய்து, மதுபாட்டில், காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X