பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : குடிநீர் குழாய் பழுதால், விழுப்புரம் நகராட்சியில் 17 வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை லாரிகள் மூலம் வழங்கப்படவுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு;விழுப்புரம் நகராட்சிக்கு புதிய குடிநீர் திட்டத்தின்படி எல்லீஸ்சத்திரம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் நரசிங்கபுரம், அலமேலுபுரம், கீழ்பெரும்பாக்கம், காமராஜர் பள்ளி மைதானம் ஆகிய

விழுப்புரம் : குடிநீர் குழாய் பழுதால், விழுப்புரம் நகராட்சியில் 17 வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை லாரிகள் மூலம் வழங்கப்படவுள்ளது.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு;விழுப்புரம் நகராட்சிக்கு புதிய குடிநீர் திட்டத்தின்படி எல்லீஸ்சத்திரம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் நரசிங்கபுரம், அலமேலுபுரம், கீழ்பெரும்பாக்கம், காமராஜர் பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு 18, 21, 22, 23, 24, 25, 2, 3, 20, 34, 35, 37, 7, 8, 9, 10, 17 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, குடிநீர் ஏற்றும் பிரதான குழாய் சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழி சாலையின்கீழ் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகின்றது. இதை சீர்செய்யும் பணி நகராட்சி ஆணையரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதினை சரிசெய்ய நகராட்சி மூலம் 30.8.2021 முதல் 1.9.2021 வரை போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

எனவே, இக்குழாயின் பழுதினை சரி செய்யும் வரை மேலே குறிப்பிட்டுள்ள வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி குடிநீர் விநியோகம் தொடர்பாக 73958 55587, 9751 970929, 90804 65425, 87787 21684 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X