பொது செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன 106 மொபைல்கள் மீட்பு போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 106 மொபைல் போன்களை மீட்டு, உரியோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை மூன்று ஆண்டுகளில் 500 மொபைல் போன்கள் காணாமல் போயுள்ளது.இது குறித்து, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனுக்கள் பெறப்பட்டது. காணாமல் போன மொபைல்களை கண்டுபிடிக்க,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 106 மொபைல் போன்களை மீட்டு, உரியோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை மூன்று ஆண்டுகளில் 500 மொபைல் போன்கள் காணாமல் போயுள்ளது.

இது குறித்து, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனுக்கள் பெறப்பட்டது. காணாமல் போன மொபைல்களை கண்டுபிடிக்க, எஸ்.பி., ஸ்ரீநாதா காவலர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில், டி.எஸ்.பி., உமாசங்கர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் மகாமார்க்ஸ், கிருஷ்ணகுமார், இளவரசன், செல்வி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 106 விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு மொபைல்களை கண்டுபிடித்தனர். இந்த மொபைல்கள் உரியோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமை தாங்கி, மொபைல்களை தவற விட்ட உரிய நபர்களிடம் வழங்கி, காணாமல் போன மொபைல் கண்டுபிடிக்கும் பணி தொடரும் என கூறினார். சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களை, எஸ்.பி., ஸ்ரீநாதா பாராட்டி சான்றிதழ், வெகுமதி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X