கிரைம் செய்திகள்..| Dinamalar

கிரைம் செய்திகள்..

Added : ஆக 29, 2021
Share
கோவில் உண்டியலை உடைத்து திருட்டுவிழுப்புரம்: கெடார் அருகே வெங்கந்துார் கிராமத்தில் அமைச்சாரம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக அக்கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல்,61; என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்து கொண்டு, கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை பூஜை செய்வதற்காக வந்தபோது கோவிலின் பூட்டு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம்: கெடார் அருகே வெங்கந்துார் கிராமத்தில் அமைச்சாரம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக அக்கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல்,61; என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்து கொண்டு, கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை பூஜை செய்வதற்காக வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது, உண்டியல் உடைத்து, அதில் பக்தர்களின் காணிக்கை பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. உண்டியலில் ரூ. 10 ஆயிரம் வரை காணிக்கை இருந்தது. இது குறித்து கெடார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வயிற்று வலியால் சிறுவன் சாவு

வானுார்: புளிச்சப்பள்ளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சரத்குமார், 17; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 24ம் தேதி வலி அதிகமானதால், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.வானுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

மது பாட்டில் விற்ற மூதாட்டி கைது

திருவெண்ணெய்நல்லுார்: ஆனத்துார் கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற பிச்சைக்காரி, 72; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
.மாமியாரை தாக்கிய மருமகன் கைது

திருவெண்ணெய்நல்லுார்: மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் மனைவி கஸ்துாரி, 55; இவரது மருமகன் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல், 33. இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 26ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வடிவேல் கஸ்துாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து வடிவேலை கைது செய்தனர்.வழுக்கி விழுந்த வாலிபர் சாவுதிருவெண்ணெய்நல்லுார்: ஆனத்துார் கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் சிவக்குமார், 40; டீ மாஸ்டர். இவர் கடந்த 1ம் தேதி அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் வழுக்கி, அங்குள்ள கல்லில் விழுந்ததில் படு காயமடைந்தார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தந்தை, மகன் மீது வழக்கு பதிவு

திருவெண்ணெய்நல்லுார்: துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் தண்டபாணி, 63; ராமானுஜம், 51; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 26ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ராமானுஜம், அவரது மகன் பாஸ்கர், 30; ஆகியோர் தண்டபாணியை தாக்கினர். புகாரின்பேரில் ராமானுஜம், பாஸ்கர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

லாரி டிரைவரிடம் மொபைல் பறிப்பு

திருவெண்ணெய்நல்லுார்: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த சிந்தாமனியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கம்பலத்தான், 21; லாரி டிரைவர். இவரும் லோடு மேன் பெரியசாமி, 36, என்பவரும் சென்னையில் இருந்து ஈச்சர் லாரியில் (டிஎன்.28.எம்.3055) வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிகொண்டு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேட்டூர் நோக்கி சென்று சென்று கொண்டிருந்தனர்.மாமந்துார் அருகே காரில் (டிஎன்.07.6116) வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் லாரியை நிறுத்தி, டிரைவர் கம்பலத்தானை தாக்கி, அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களை பறித்துக் கொண்டு, தப்பிச்சென்றனர். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

லாரி மோதி ஒருவர் பலிசின்னசேலம்: வி.அலம்பலம், தத்தாதிரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு,44; இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வி.கூட்ரோடு சென்றுவிட்டு, மீண்டும் பைக்கில் வீடு திரும்பும் போது, அவ்வழியாக வந்த லாரி (டி.என்.01. ஆர்.9459) பைக் மீது மோதியது. இதில், ராஜவேலு இறந்தார். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தேர் வெள்ளோட்டம்: 30 பேர் மீது வழக்குசங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம், ஆருர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு ரூ. 10 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கொரோனா காலத்தில் போலீசாரிடம் அனுமதி பெறாமல், திரளான மக்களை கூட்டித் தேர் வெள்ளோட்டம் விட்ட ஆருர் முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவி, குமார், சீனுவாசன், ராஜேந்திரன், பாரதி உட்பட 30 பேர் மீது சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X