பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் கூலியை உயர்த்தி வழங்க கோரி, டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் நலச்சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இங்குள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில், கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் : விழுப்புரத்தில் கூலியை உயர்த்தி வழங்க கோரி, டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் நலச்சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இங்குள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில், கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் மதுபாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டியை ஏற்ற 1.50 ரூபாய் தருவதாகவும்,

இந்த கூலியை உயர்த்தி வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.இந்த போராட்டத்தை யொட்டி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பானங்கள் ஏற்றி அனுப்பும் பணி பாதித்தது. பின், டாஸ்மாக் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டம் செய்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூலி உயர்வு சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X