பொது செய்தி

தமிழ்நாடு

துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி இ.சி.ஆரில் மீனவர்கள் சாலை மறியில்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மரக்காணம் : பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைத்து தர கோரி, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம், பெரிய முதலியார்சாவடி, பிள்ளைச்சாவடி பகுதிகளில் கடல் அலை அரிப்பு காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.இதனை தடுக்க துாண்டில்முள் வளைவு அமைத்து தர, இப்பகுதி
 துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி  இ.சி.ஆரில் மீனவர்கள் சாலை மறியில்

மரக்காணம் : பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைத்து தர கோரி, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம், பெரிய முதலியார்சாவடி, பிள்ளைச்சாவடி பகுதிகளில் கடல் அலை அரிப்பு காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனை தடுக்க துாண்டில்முள் வளைவு அமைத்து தர, இப்பகுதி மீனவர்கள் தமிழக அரசு மற்றும் கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.கோரிக்கையை ஏற்று துாண்டில்முள் வளைவு அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. மீண்டும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் மீண்டும் சேதமடைய தொடங்கியுள்ளது.பிள்ளைச்சாவடி பகுதியில் அதிகப்படியான கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பின் காரணமாக அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

இதனால் தமிழக அரசு உடனடியாக துாண்டில் முள் வளைவு அமைத்துதர கோரி, பிள்ளைச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர்.ஆதார், ரேஷன் அட்டைகளை சாலையில் வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.கோட்டக்கப்பம் டி.எஸ்.பி., அருண் மீனவ பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்ததை ஏற்று மீனவர்கள் மறியலை கைவிட்டனர்.இதனால் புதுச்சேரி - சென்னை இ.சி.ஆரில் காலை 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X