வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

Added : ஆக 29, 2021
Share
விழுப்புரம் : வளவனுார் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம், மடுகரையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் வெங்கடாஜலபதி,26; லாரி டிரைவர். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, இவரின் தங்கை சுதா என்பவர், சகோதரர் எதிர்ப்பை மீறி அப்பகுதியை சேர்ந்த உறவினரை காதலித்து திருமணம் செய்தார்.இதையடுத்து, அவரிடம் வெங்கடாஜலபதி தனது

விழுப்புரம் : வளவனுார் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், மடுகரையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் வெங்கடாஜலபதி,26; லாரி டிரைவர். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, இவரின் தங்கை சுதா என்பவர், சகோதரர் எதிர்ப்பை மீறி அப்பகுதியை சேர்ந்த உறவினரை காதலித்து திருமணம் செய்தார்.இதையடுத்து, அவரிடம் வெங்கடாஜலபதி தனது பெற்றோரை பேசக்கூடாது என கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடாஜலபதி பெற்றோர், சுதாவிடம் பேசி நலம் விசாரித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த வெங்கடாஜலபதி கடந்த 18 ம் தேதி, கொங்கம்பட்டு ஏரிக்கரை அருகே எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கினார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X