பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் நவீன கழிவறை கலெக்டர் திடீர் ஆய்வு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : வழுதரெட்டி பகுதியில் ஊரக சுகாதார திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் நவீன கழிப்பறையை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டியில் உள்ள நவீன கழிப்பறையை சீரமைக்க கோரி, பொதுமக்கள் மனு அளித்ததை யொட்டி, கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள கழிப்பறை கதவுகள், தரைதளம், குழாய்கள் ஆகியவற்றை

விழுப்புரம் : வழுதரெட்டி பகுதியில் ஊரக சுகாதார திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் நவீன கழிப்பறையை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டியில் உள்ள நவீன கழிப்பறையை சீரமைக்க கோரி, பொதுமக்கள் மனு அளித்ததை யொட்டி, கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள கழிப்பறை கதவுகள், தரைதளம், குழாய்கள் ஆகியவற்றை முழுமையாக மாற்றி, நீர்தேக்க தொட்டியை புதுப்பித்து, கழிப்பறை முழுவதும் வர்ணம் தீட்ட வேண்டும்.

சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி தோடக்கலைத்துறை சார்பில் மரங்கள், செடிகள் அமைத்து பராமரிக்க வேண்டும். இந்த பணிகளை விரைந்து முடித்து கழிப்பறையை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X