சென்னை தொழிலதிபரிடம் திருடிய டிரைவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை தொழிலதிபரிடம் திருடிய டிரைவர் கைது

Added : ஆக 29, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் தொழிலதிபரிடம் நகை மற்றும் பணத்தை திருடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, சிந்தாதிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபரைஸ்சன்ஸ் மகன் திலீப்குமார்,40; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி குடும்பத்தோடு ரயில் மூலம் பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்தம் விழாவில் பங்கேற்றார்.பின், அன்று மாலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் தொழிலதிபரிடம் நகை மற்றும் பணத்தை திருடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சிந்தாதிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபரைஸ்சன்ஸ் மகன் திலீப்குமார்,40; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி குடும்பத்தோடு ரயில் மூலம் பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்தம் விழாவில் பங்கேற்றார்.பின், அன்று மாலை சென்னைக்கு செல்வதற்காக, மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வேன் ஒன்றில் குடும்பத்தோடு ஏறியுள்ளார்.

வேனை, விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப் மகன் அப்துல் ரசாக்,47, ஓட்டினார்.விழுப்புரம் வந்த அவர்கள், வேன் மூலம் வி.மருதுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பினர். பின், சென்னை சென்று தனது பேக்கை பார்த்த போது, அதில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 3 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. நகையின் மதிப்பு 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நகை, பணத்தை திருடிய டிரைவர் அப்துல்ரசாக்கை நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X