மைசூரு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது| Dinamalar

மைசூரு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

Added : ஆக 29, 2021
Share
மைசூரு-கர்நாடகாவின் மைசூரில், எம்.பி.ஏ., மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்து கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் நண்பருடன், 24ல் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

மைசூரு-கர்நாடகாவின் மைசூரில், எம்.பி.ஏ., மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்து கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் நண்பருடன், 24ல் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கும்பலால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்; நண்பரும் தாக்கப்பட்டார்.போராட்டம்இந்த சம்பவம் கர்நாடகாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் பல தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அந்த கும்பல் மது அருந்தி விட்டு, தன்னை கற்கள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அடித்து துன்புறுத்தியதாகவும், 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் மாணவியின் நண்பர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். தமிழ் கலந்த கன்னட மொழியில் அவர்கள் பேசியதாகவும் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் தமிழகத்தின் சத்தியமங்கலத்தில் உள்ள தாளவாடியிலிருந்து, அந்த கும்பல் வந்ததற்கான பஸ் டிக்கெட் கிடைத்தது.இதன் மூலம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்கள் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதினர். மொபைல் நெட்வொர்க் தகவல்களை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் தமிழகம் தப்பி சென்றது உறுதியானது.

இதையடுத்து, கர்நாடக - தமிழக எல்லையான ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தின் தாளவாடி பகுதியின் சூசைபுரத்தைச் சேர்ந்த பூபதி, 35, நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது, திருப்பூர்மாவட்டம் அவினாசி அருகே மற்றவர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், தாளவாடியைச் சேர்ந்த ஜோசப், 28, அவினாசியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற அரவிந்த், 21, சேவூர் லுார்துபுரத்தைச் சேர்ந்த முருகேசன், 22, சேவூர் வடுகபாளையத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இவர்கள் நான்கு பேரையும் அவர்களது வீடுகளுக்குள் புகுந்து, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேவூர் போலீசார் உதவி யுடன், மைசூரு போலீசார் அவர்களை அழைத்துச் சென்றனர். நான்கு பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்றொரு நபரை, போலீசார் தேடி வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள்இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கூலித் தொழிலாளர்கள். சிலர் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள். சரக்கு வாகனம் மூலம் அடிக்கடி மைசூரு வந்து, காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர். சம்பவம் நடந்த நாளன்று மைசூருக்கு வாழைத்தார் எடுத்து வந்து விற்று திரும்பும் போது, மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.பலாத்கார சம்பவத்துக்கு பின், குற்றவாளிகள்தங்கள் மொபைல் போனில் இருந்த 'சிம் கார்டு'களை துாக்கி வீசி விட்டு, தமிழகத்தில் வேறு சிம் கார்டுகளை வாங்கி போட்டுள்ளனர்.

ஆனால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வாயிலாக குற்றவாளிகளை சுலபமாக பிடிக்க முடிந்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தான்காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்காத தந்தையை கொன்று, சிறை சென்றவர் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்ததற்காக, போலீசாருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர். மும்பை சென்ற மாணவிபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து, தங்கள் மகளை சொந்த ஊரான மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நேற்று அழைத்து சென்றனர். சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X