பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 'ரெட் அலர்ட்' பேரிடர் மீட்பு குழு தயார்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி-நீலகிரி மாவட்டத்தில்,'ரெட் அலர்ட்' எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.'நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், மிக அதிக கன மழை பெய்ய கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நீலகிரியில், கடந்த நான்கு நாட்களில் சராசரி மழை, 5.4 செ.மீ., பதிவாகியுள்ளது. '256 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் அனைத்து துறையினர்

ஊட்டி-நீலகிரி மாவட்டத்தில்,'ரெட் அலர்ட்' எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.



latest tamil news


'நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், மிக அதிக கன மழை பெய்ய கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நீலகிரியில், கடந்த நான்கு நாட்களில் சராசரி மழை, 5.4 செ.மீ., பதிவாகியுள்ளது. '256 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் அனைத்து துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.


latest tamil news


தவிர, 456 நிவாரண முகாம்களும் தயாராக உள்ளன. அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு குறைப்பாடு இருந்தால் முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி கூறுகையில், ''ரெட் அலர்ட் காரணமாக, பேரிடர் சம்பவங்களை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களுடன் தீயணைப்பு, மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்படுவர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பரதன். பாரதம். ஜெய் ஹிந்த். 27ஆன் தேதிலேருந்து நானும் மானத்தையே அண்ணாந்து பாத்திட்டுருக்கிரேன் ஒன்னையும் கானமோ!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X