தமிழ்நாடு

கப்பலில் ஆடை அனுப்புவதில் சிக்கல்: அலைகள் ஓய்வதில்லை! கட்டணம் மும்மடங்கு உயர்வு: கன்டெய்னர்கள் தட்டுப்பாடு

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:கன்டெய்னர் தட்டுப்பாடு, கப்பல் சரக்கு போக்குவரத்து கட்டணம் அபரிமித உயர்வால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், கப்பலில் ஆடைகளை அனுப்பி வைப்பதில், சிக்கலை சந்தித்து வருகின்றன.திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி செய்யும் ஆடைகள், சரக்கு பெட்டகங்களில் (கன்டெய்னர்) வைத்து, கப்பலில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன; கொரோனாவுக்கு பின்
 கப்பலில் ஆடை அனுப்புவதில் சிக்கல்: அலைகள் ஓய்வதில்லை! கட்டணம் மும்மடங்கு உயர்வு: கன்டெய்னர்கள் தட்டுப்பாடு

திருப்பூர்:கன்டெய்னர் தட்டுப்பாடு, கப்பல் சரக்கு போக்குவரத்து கட்டணம் அபரிமித உயர்வால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், கப்பலில் ஆடைகளை அனுப்பி வைப்பதில், சிக்கலை சந்தித்து வருகின்றன.

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி செய்யும் ஆடைகள், சரக்கு பெட்டகங்களில் (கன்டெய்னர்) வைத்து, கப்பலில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன; கொரோனாவுக்கு பின் உலகளாவிய நாடுகளில், சரக்கு கையாள்வதில், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச அளவில் சரக்கு கப்பல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; கன்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், கட்டணங்களை உயர்த்தியுள்ளன.உற்பத்தி செய்த ஆடைகளை கப்பலில் அனுப்ப போதிய கன்டெய்னர் கிடைக்காமலும், குறித்த காலத்துக்குள் வர்த்தகருக்கு ஆடைகளை அனுப்பி வைக்க முடியாமலும், போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பாலும், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் பரிதவிக்கின்றன.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:சரக்கு கப்பலில் செல்லும் மாலுமி உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு தொற்று உறுதியானாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்துகின்றனர். கப்பல்கள் சரக்குடன், துறைமுகங்களிலேயே நிறுத்தப்படுகின்றன.அதனால், சரக்கு கப்பல் இயக்கம் குறைந்துள்ளது. கன்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், சரக்கு கையாளும் நிறுவனங்கள், கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

அதன்படி, 40 அடி நீளமுள்ள ஒரு கன்டெய்னரின், அமெரிக்காவுக்கு ஆடை அனுப்புவதற்கான கட்டணம், 2.90 லட்சம் ரூபாயாக இருந்தது; தற்போது, 11 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவுக்கு ஒரு கன்டெய்னர் ஆடை அனுப்புவதற்கான செலவு, கொரோனாவுக்கு முன் 1.20 லட்சம் ரூபாயாக இருந்தது; தற்போது, 4 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

போக்குவரத்து செலவினங்களை வெளிநாட்டு வர்த்தகர் ஏற்றுக்கொண்டாலும் கூட, உற்பத்தி நிறுவனமே செலவிட வேண்டிவந்தாலும், அதிகளவிலான கட்டண உயர்வு, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு பெரும் பாதகத்தையே ஏற்படுத்துகிறது.ஆடைகள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டால், புதிய ஆர்டர்கள் வழங்க வர்த்தகர்கள் தயங்குகின்றனர். போக்குவரத்து செலவுகளை கணக்கிட்டு, குறைந்த எண்ணிக்கையில் ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்குகின்றனர்.

ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமும் சரிகிறது. இதே நிலை தொடர்ந்தால், ஏற்றுமதி நிறுவனங்கள், பெரும் வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடும். கன்டெய்னர் தட்டுப்பாடு பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டும் என, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.ஆனாலும், பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உலகளாவிய நாடுகள் கூட்டாக பேசி, கன்டெய்னர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; போதுமான எண்ணிக்கையில் சரக்கு கப்பல்கள் இயக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூழ்கடிக்கும் 'அலை'கள்!
ஊழியர் ஒருவருக்கு தொற்று வந்தாலும், கப்பல் நிறுத்தம்
கப்பல் இயக்கம் குறைந்தது
கன்டெய்னர் தட்டுப்பாடு; கட்டணம் உயர்வு
ஆடை அனுப்ப செலவு மும்முடங்குஉ யர்வு
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் பாதகம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202115:37:05 IST Report Abuse
Ram Pollachi மானம் கப்பல் ஏறி போகுது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X