பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர்ப்பு கூட்டம் நடத்திய போலீசார்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
போத்தனூர்:மாநகர போலீசின் தெற்கு பகுதிக்குட்பட்டது, போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன்கள். இவற்றில் புகார் கொடுத்து தீர்வு ஏற்படாத புகார்தாரர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம், போத்தனூரிலுள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், குடும்ப பிரச்னைகள், பொது இடங்களில் ஏற்பட்ட தகராறு
 குறைதீர்ப்பு கூட்டம் நடத்திய போலீசார்

போத்தனூர்:மாநகர போலீசின் தெற்கு பகுதிக்குட்பட்டது, போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன்கள். இவற்றில் புகார் கொடுத்து தீர்வு ஏற்படாத புகார்தாரர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம், போத்தனூரிலுள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், குடும்ப பிரச்னைகள், பொது இடங்களில் ஏற்பட்ட தகராறு உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டன. 60 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,க்கள் தாமரைக்கண்ணன், கணேஷ்குமார், சிலம்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X