பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர்களுக்கு டீன் அட்வைஸ்! தினமலர் செய்தி எதிரொலி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கோவை:தினமலர் செய்தி எதிரொலியாக, அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு, அவசர காலம் கருதி, முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (யு.எஸ்.ஜி.,) பரிசோதனைக்கு செல்லும் நோயாளிகளை, நீண்ட நாட்கள் காக்க வைப்பதாக, நோயாளிகளின் கருத்துக்களுடன் நேற்று நமது நாளிதழில் செய்தி

கோவை:தினமலர் செய்தி எதிரொலியாக, அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு, அவசர காலம் கருதி, முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (யு.எஸ்.ஜி.,) பரிசோதனைக்கு செல்லும் நோயாளிகளை, நீண்ட நாட்கள் காக்க வைப்பதாக, நோயாளிகளின் கருத்துக்களுடன் நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இம்மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு குறைந்தது, 200ல் இருந்து 250 பேருக்கு, யு.எஸ்.ஜி.,ஸ்கேன் எடுக்கப்படுகிறது. குறைந்தது ஒரு நோயாளிக்கு ஸ்கேன் செய்வதற்கு, 10 நிமிடங்கள் தேவைப்படுகிறது. 'அவசியம் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும், இந்த பரிசோதனை செய்ய, டாக்டர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். ''அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, முன்னுரிமை அளித்து ஸ்கேன் செய்ய வேண்டும். நோயாளிகளிடம் டாக்டர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X