சாதாரண கட்டண ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு எம்.பி., கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதாரண கட்டண ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு எம்.பி., கடிதம்

Added : ஆக 29, 2021
Share
கோவை:கோவை மண்டலத்தில் சாதாரண கட்டண ரயில்களை இயக்குமாறு, கோவை எம்.பி., நடராஜன் தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளார்.கோவை எம்.பி., நடராஜன், தெற்கு ரயில்வே முதன்மை மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயத்தில், ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சில வழித்தடங்களில், அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு

கோவை:கோவை மண்டலத்தில் சாதாரண கட்டண ரயில்களை இயக்குமாறு, கோவை எம்.பி., நடராஜன் தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளார்.கோவை எம்.பி., நடராஜன், தெற்கு ரயில்வே முதன்மை மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயத்தில், ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சில வழித்தடங்களில், அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சாதாரண மக்கள், பணிக்கு செல்வோர் பயன்படும் வகையில், சாதாரண ரயில்கள் இயக்கப்படவில்லை.தற்போது, தொற்று குறைந்து பஸ்கள் இயக்கம், தியேட்டர்கள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி என சகஜ நிலை திரும்பி வருகிறது. கடந்த வாரம், ஓரிரு சாதாரண கட்டண ரயில்கள் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. ஆனால், கோவை மண்டலத்தில் இயக்கப்பட்டு வந்த சாதாரண ரயில்கள் இயக்கம், குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.கோவை, திருப்பூர் நகரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, கோவை - சேலம், கோவை - பொள்ளாச்சி, ஈரோடு - பாலக்காடு, கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில், சாதாரண ரயில்களை இயக்க, ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X