பொது செய்தி

தமிழ்நாடு

பாப்பா டிரெஸ்ல 'உச்சா' போயிருச்சா!

Added : ஆக 29, 2021
Share
Advertisement
எ ன்னது... கழிவறைக்கு பழக்குவதற்கெல்லாம் பயிற்சியா... என நம்மில் பலர் முகம் சுழிப்பர். ஆனால், ஒருவரின் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதே இதிலிருந்து தான் துவங்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.குழந்தைகளுக்கு காலைக்கடன் பற்றிய முக்கியத்துவம் குறித்து, ஆரம்பத்திலேயே பயிற்சி அளித்து விட்டால், ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வை எளிதாக பெற்று விடுவர் என்கின்றனர்.
 பாப்பா டிரெஸ்ல 'உச்சா' போயிருச்சா!

எ ன்னது... கழிவறைக்கு பழக்குவதற்கெல்லாம் பயிற்சியா... என நம்மில் பலர் முகம் சுழிப்பர். ஆனால், ஒருவரின் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதே இதிலிருந்து தான் துவங்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.குழந்தைகளுக்கு காலைக்கடன் பற்றிய முக்கியத்துவம் குறித்து, ஆரம்பத்திலேயே பயிற்சி அளித்து விட்டால், ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வை எளிதாக பெற்று விடுவர் என்கின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல கமிட்டி உறுப்பினர் மகேஷ் வழங்கிய 'டிப்ஸ்'.
சிறு வயதிலேயே, கழிப்பறையின் முக்கியத்தும் குறித்து, குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து விட வேண்டும். தற்போது சந்தைகளில் பிளாஸ்டிக் கழிவறை நாற்காலிகள் கிடைக்கின்றன. இதை பயன்படுத்தி, ஏழு, எட்டு மாதங்களிலேயே கழிவறை பயிற்சிகளை துவக்கி விடலாம். n முதலில் அவர்களின் பேன்ட்ஸ், பாவாடை, ஜட்டி போன்றவற்றை பெற்றோர் உதவியுடன் கழற்றி மாட்டிக்கொள்ள, கற்றுத்தர வேண்டும்.

சிறுநீர் வரும் பொழுது தெரிவிக்க, நாம் ஒரு உச்சரிப்பை அவர்களது மழலை மொழியில், 'உச்சா' 'கக்கா' 'உவே' போன்ற ஏதேனும் வார்த்தைகளை பழக்கப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம். பழகும் வரை, தொடர்ந்து கூற வேண்டும்.

1.5 வயதில், டயபர் அணிவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். n இரவு துாக்கத்திற்கு முன்பும், மதியம், காலை, என எப்போது துாங்கி எழுந்த பின்பும், உணவுக்கு முன்பும், சற்று நேரம் கழித்தும், சிறுநீர் கழிக்க வைத்து பழக்க வேண்டும்.

அவசரத்தில் ஆடைகளில் சிறுநீர் கழித்தாலோ, மலம் கழித்தாலோ திட்டாமல் பக்குவமாக எடுத்து கூற வேண்டும். அவர்கள் கூறும் வரை காத்திருக்காமல், உரிய இடைவேளையில் நாம் அழைத்து சென்று பழக்க வேண்டும்.

குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்படுவது இயல்பு. காலைக்கடன் சரியாக செய்தாலே, அவர்கள் மனநலம், உடல்நலம் நன்றாக இருக்கும்.n தினமும் 6 முதல் 10 முறை சிறுநீர் கழிக்கவும், ஒன்று, இரண்டு முறை மலம் கழிக்கவும் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். நன்றாக நடை பழகிய பின், பெற்றோர் உதவியுடன் பெரியவர்களின் கழிவறையை பயன்படுத்த கற்றுக்கொடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X