பொது செய்தி

தமிழ்நாடு

'அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்'

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மாவட்ட ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்புலியகுளம், ஜூனியர்ஸ் புட்பால் கிளப் சார்பில், 2ம் ஆண்டு பையாஸ் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. வீரர்களுக்கான, 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டி நடக்கிறது. 'லீக்' மற்றும் 'நாக்- அவுட்' முறையில் நடந்த போட்டியில், 20 அணிகள் பங்கேற்றன. இதில், டெவில் ஸ்டைகர்ஸ் அணி, எம்.எஸ்., அகாடமி
 'அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்'

மாவட்ட ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்
புலியகுளம், ஜூனியர்ஸ் புட்பால் கிளப் சார்பில், 2ம் ஆண்டு பையாஸ் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. வீரர்களுக்கான, 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டி நடக்கிறது. 'லீக்' மற்றும் 'நாக்- அவுட்' முறையில் நடந்த போட்டியில், 20 அணிகள் பங்கேற்றன. இதில், டெவில் ஸ்டைகர்ஸ் அணி, எம்.எஸ்., அகாடமி அணி, டிராக் போர்ஸ் எப்.சி., அணி, சி.சி., எப்.ஏ., அணி, ஓ.பி.சி., எப்.சி., அணி, பினிக்ஸ் எப்.சி., அணி, சூலுார் எப்.எப்.சி., அணிகள் காலியிறுதிப்போட்டிக்கு, தகுதி பெற்றன. காலியிறுதிப்போட்டிகள், இன்று நடக்கஉள்ளன.4வது டிவிஷன் போட்டி சச்சின் சி.சி.,அபார வெற்றி மாவட்ட அளவிலான நான்காம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், சிவா அழகு நாச்சியப்பனின் அபார பந்து வீச்சால், சச்சின் சி.சி., அணி, 194 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு, 'எல்.ஜி., டிராபிக்கான' நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், சச்சின் சி.சி., அணி, காஸ்மோ வில்லேஜ் ஆர்பிஇ எஸ்.ஏ., அணிகள் மோதின. முதலில் விளையாடிய சச்சின் சி.சி., அணி, 50 ஓவரில், 248 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய காஸ்மோ வில்லேஜ் அணியினர், சிவா அழகு நாச்சியப்பனின் அபார பந்து வீச்சால், மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்து, 19.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 54 ரன் மட்டுமே எடுத்து, 194 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அணியில் சிறப்பாக பந்து வீசிய, சிவ அழகு நாச்சியப்பன்- 9 விக்கெட்களை வீழ்த்தினார். மாநில வலு துாக்கும் போட்டிவரும் 17ல் துவக்கம் மாநில அளவிலான வலு துாக்கும் போட்டி, கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் வரும், செப்., 17ம் தேதியன்று நடக்கிறது. தமிழ்நாடு வலுதுாக்கும் அசோசியேஷன் மற்றும் கே.பி.ஆர்., கல்வி நிறுவனம் இணைந்து, 22வது மாநில சப்-ஜூனியர், 38வது மாநில ஜூனியர், 48வது மாநில சீனியர் வலுதுாக்கும் போட்டிகள் கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் வரும் செப்., 17 ல் துவங்கி, 19ல் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான 'லோகோ' வெளியீட்டு விழா, கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கே.பி.ஆர்., நிறுவனங்களின் சேர்மன் ராமசாமி, தமிழ்நாடு வலுதுாக்கும் அசோசியேஷன் சேர்மன் மோகன்சங்கர், கல்லுாரி முதல்வர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மங்களூரில் நடக்கவுள்ள, தேசிய வலுதுாக்கும் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். இத்தகவலை, மாநில வலுதுாக்கும் அசோசியேஷன் செயலாளர் நாகராஜன் தெரிவித்தார்.
கல்லுாரி மாணவிகளுக்கு உடல் மேம்பாட்டு பயிற்சி
கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கான 'பிட்னஸ்' குறித்த, ஆன்லைன் வகுப்பு நடந்தது.இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், தேசிய விளையாட்டு தினம், 'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி குறித்த வகுப்பு நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'பிட்னஸ்' பயிற்சியாளர் தீபாராணி, மாணவிகளுக்கு உடல்திறன் மேம்பாடு, யோகா, உணவு முறை போன்ற பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக கல்லுாரியின் முதல்வர் சித்ரா நிகழ்ச்சியை, துவக்கி வைத்தார். கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி, பேராசிரியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி கூறுகையில், ''இன்றைய கால கட்டத்தில், அனைத்து வயதினரும் கட்டாயமாக, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மைதானம் செல்ல முடியாத மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்தபடியே யோகா, எளிய 'பிட்னஸ்' பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X