உழவர் சந்தைக்கு இடம் கிடைக்காமல் தவிப்பு: பெ.நா.பாளையம் விவசாயிகளின் கனவு நிறைவேறுமா

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், உழவர் சந்தை அமைக்க இடம் கிடைக்காமல், விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், ஆனைகட்டி, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன் பாளையம், கோவனூர், நரசிம்மநாயக்கன்பாளையம், செல்வபுரம், காளிபாளையம், சாமநாயக்கன்பாளையம், வெள்ளமடை உள்ளிட்ட பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பில்,

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், உழவர் சந்தை அமைக்க இடம் கிடைக்காமல், விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், ஆனைகட்டி, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன் பாளையம், கோவனூர், நரசிம்மநாயக்கன்பாளையம், செல்வபுரம், காளிபாளையம், சாமநாயக்கன்பாளையம், வெள்ளமடை உள்ளிட்ட பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பில், தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன.இவை விற்பனைக்காக, கோவையில் உள்ள உழவர் சந்தைக்குதான் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், பொதுமக்கள் எளிதாக அணுகி, காய்கறி வாங்கி பயன் பெறவும், விவசாயிகள் நன்மை அடையவும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், உழவர் சந்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகள், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.முன்னோடி விவசாயி விஜயகணபதி கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு செல்ல, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன் பாளையத்தில் இருந்து, அரசு பஸ் அதிகாலை புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், விவசாயிகள் பலன் அடைந்தனர்.காலப்போக்கில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், விவசாயிகள், காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல், தவிக்கும் நிலை ஏற்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளுக்கு, உரிய விலை கிடைக்காததால், பல விவசாயிகள் விவசாயம் செய்வதையே விட்டு விட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், உழவர் சந்தை அமைக்கப்பட்டால், பல விவசாயிகள், மீண்டும் காய்கறி பயிர் செய்ய முன்வருவர். இதனால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும்," என்றார்.இது குறித்து, தமிழக வேளாண் துறை மார்க்கெட்டிங் பிரிவு துணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறுகையில், "பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், விவசாயிகள் நலம்பெறும் வகையில், உழவர் சந்தை அமைக்க, இடம் தேர்வு செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் சந்தைப் பகுதியில், 20 சென்ட் அளவில் நிலம் கிடைத்தால், விவசாயிகள் காய்கறி கொண்டு வர, போக்குவரத்துக்கு உதவியாக இருப்பதோடு, பொது மக்களும் எளிதில் அணுகும்படி இருக்கும். இது குறித்து, தொடர்புடைய அதிகாரிகளுடன் பேச்சு நடந்து வருகிறது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X