பக்கத்து தெருவுக்கு போகக்கூட பயமா இருக்கு! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பக்கத்து தெருவுக்கு போகக்கூட பயமா இருக்கு!

Added : ஆக 29, 2021
Share
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் அடுத்தடுத்து வீடு புகுந்து கொள்ளையும், வழிப்பறி கொள்ளையும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதனால், வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து தெருவுக்கு செல்வதற்கு கூட பொதுமக்கள் பயப்படுகின்றனர்.இதோ சில சாம்பிள்கள்...n மேட்டுப்பாளையம் பங்களாமேடு பொம்மை காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி 44 கூலித்தொழிலாளி. கணவர் துரைராஜ், மகன் முரளி

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் அடுத்தடுத்து வீடு புகுந்து கொள்ளையும், வழிப்பறி கொள்ளையும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதனால், வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து தெருவுக்கு செல்வதற்கு கூட பொதுமக்கள் பயப்படுகின்றனர்.இதோ சில சாம்பிள்கள்...n மேட்டுப்பாளையம் பங்களாமேடு பொம்மை காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி 44 கூலித்தொழிலாளி. கணவர் துரைராஜ், மகன் முரளி ஆகியோர், கூலி வேலைக்கு செல்கின்றனர். வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். மதியம் வந்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த, ஒன்னே முக்கால் பவுன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.n மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த ராமமூர்த்தி, மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் வெள்ளக்கோவிலில் உள்ள, குல தெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வந்த போது, வீட்டின் கதவு திறந்திருந்தது. பீரோவில் வைத்திருந்த, 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.n கடந்த மூன்று தினங்களுக்கு முன், ராமேகவுண்டன்புதூரை சேர்ந்த ரங்கம்மாள் என்ற மூதாட்டி, தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு, மேட்டுப்பாளையம் திரும்பி வந்தார். பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த இவரிடம், அங்கு வந்த ஒரு இளைஞர், முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக, கழுத்தில் அணிந்திருந்த, 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.இப்படி, ஒரு வாரத்தில் தொடர்ந்து வழிப்பறியும், வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.'தகவல் தெரிவிக்க வேண்டும்'போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் கூறுகையில், ''பொதுமக்கள் வெளியூருக்குச் செல்லும்போது, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடையாளம் தெரியாதவர்கள், ஏதாவது ஆசை வார்த்தை கூறினால், அவற்றை நம்ப வேண்டாம். பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X