பொது செய்தி

தமிழ்நாடு

போர்டு வச்சாச்சு; இனி நோட்டீஸ் பறக்கும்! 'ரிசர்வ் சைட்'டுகளை மீட்க முயற்சி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கோவை;கோவையில், 4 இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, 78 சென்ட் 'ரிசர்வ் சைட்'டுகளில், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, நேற்று போர்டு வைக்கப்பட்டது. இனி, நகரமைப்பு பிரிவினர் மூலம் நோட்டீஸ் வழங்கி, மீட்கப்பட உள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவை, அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலம், 18வது வார்டு,

கோவை;கோவையில், 4 இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, 78 சென்ட் 'ரிசர்வ் சைட்'டுகளில், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, நேற்று போர்டு வைக்கப்பட்டது. இனி, நகரமைப்பு பிரிவினர் மூலம் நோட்டீஸ் வழங்கி, மீட்கப்பட உள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவை, அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலம், 18வது வார்டு, விமல் நகரில் பூங்காவுக்கு ஒதுக்கிய, ரூ.2.5 கோடி மதிப்புள்ள, 23 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது தெரியவந்தது.நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைத்தனர்.இதேபோல், 18வது வார்டு, வீரகேரளம் கிராமம், அலமேலு மங்கை நகரில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த, ரூ.1.5 கோடி மதிப்புள்ள, 10 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.அங்கு, இரும்பு கூடாரம் அமைத்து, ஓட்டல்கள் நடத்தப்படுகின்றன. அங்கும், 'மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.அதன்பின், வடவள்ளி எம்.ஜி., நகரில் பூங்கா இடம், 18 சென்ட், பள்ளிக்கூடத்துக்கான இடம் - 27 சென்ட் என, மொத்தம், 4 இடங்களில், 78 சென்ட் இடத்தில் நேற்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. அதன் மதிப்பு, 10 கோடி ரூபாய் இருக்குமென, மதிப்பிடப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்டமாக, நில அளவை ஆவணங்களை சரிபார்த்து, 'ரிசர்வ் சைட்'டுகள் அடையாளம் காணப்பட்டு, போர்டு வைக்கப்பட்டுள்ளது. இனி, நகரமைப்பு பிரிவினர் மூலமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மீட்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X