பொது செய்தி

தமிழ்நாடு

அதிக பாரம் தாங்கும் விதத்தில் தண்டவாளம்: இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் மாற்றம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கோவை;இருகூர் - போத்தனுார் ரயில் வழித்தடத்தில் நவீன இயந்திரங்கள் வாயிலாக, தண்டவாளத்தின் உறுதித்தன்மை மேம்படுத்தப்பட்டு வருகிறது.ரயில்வே நிர்வாகம், பயணிகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, மழைக்காலம் துவங்கும் முன்பு பாலங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றின் அருகே இருக்கும் தண்டவாளங்கள், கான்கிரீட் ஸ்லீப்பர்
 அதிக பாரம் தாங்கும் விதத்தில் தண்டவாளம்: இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் மாற்றம்

கோவை;இருகூர் - போத்தனுார் ரயில் வழித்தடத்தில் நவீன இயந்திரங்கள் வாயிலாக, தண்டவாளத்தின் உறுதித்தன்மை மேம்படுத்தப்பட்டு வருகிறது.ரயில்வே நிர்வாகம், பயணிகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, மழைக்காலம் துவங்கும் முன்பு பாலங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றின் அருகே இருக்கும் தண்டவாளங்கள், கான்கிரீட் ஸ்லீப்பர் கற்கள், ஜல்லி உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மாற்றப்படுகின்றன.அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டம், இருகூர் - போத்தனுார் இடையேயான, 10 கி.மீ., தொலைவுக்கு ரயில் தண்டவாளம் பராமரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கென, டி.ஆர்.டி., எனும் தண்டவாளம் புதுப்பிக்கும் ரயிலின், நவீன இயந்திரங்கள் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பழைய தண்டவாளத்தின் கீழ் உள்ள, கான்கிரீட் ஸ்லீப்பர் கற்களை பெயர்த்து எடுத்துவிட்டு, ஜல்லி கற்களை ஒதுக்கி, புதிய கற்கள், தண்டவாளம் பதித்தல் என தண்டவாளத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்தும் பணிகளை, இந்த வாகனம் செய்து வருகிறது.இதற்கென, இருகூர் அடுத்து சூர்யா நகர் செல்வதற்கான ரயில்வே கேட், கடந்த இரு நாட்கள் மூடப்பட்டது. தொடர்ந்து, சிங்காநல்லுார் குளத்தின் நடுவே உள்ள தண்டவாளம் என, போத்தனுார் வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில், சரக்கு ரயில்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. எனவே, அதிக பாரம் ஏற்றிசெல்லும்சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்செல்லும் வகையில், தண்டவாளம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த டி.ஆர்.டி., இயந்திரம் நான்கு மணி நேரத்தில், அரை கி.மீ., துாரம் வரை தண்டவாளம் அமைக்கும் திறன் கொண்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X