பொது செய்தி

தமிழ்நாடு

தட்டியெடுக்கப்போகுது மழை :மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை ஆய்வு மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, 30ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை முதல், மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் வட்டம்,

கோவை:கோவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை ஆய்வு மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, 30ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை முதல், மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் வட்டம், பவானி ஆற்றின் கரையோரம், வால்பாறை மற்றும் ஆனைமலை வட்டம், சோலையார், ஆழியாறு, பரம்பிக்குளம் நீர்தேக்கம், அதன் கால்வாய்களின் கரையோரம், மாவட்டத்தின் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.மழையின் அளவு அதிகமாக இருக்கும் காலங்களில், வீட்டில் தண்ணீர் புகும் அபாயம் இருந்தால், உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறி, அருகிலுள்ள அரசு முகாம்களில் தங்கிக்கொள்வதுடன், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.மிக அதிக கனமழை அறிவிப்பு வரப்பெற்றுள்ளதால், இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள், மரங்கள், அருகில் நிற்க வேண்டாம். மாவட்ட பேரிடர் மீட்பு மூலம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானால் உடனடியாக, 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X