பெண்களின் பொன்னான நேரம் வீணாகலாமா!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களின் 'பொன்னான' நேரம் வீணாகலாமா!

Added : ஆக 29, 2021
Share
திருப்பூர்:நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறது; தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், இத்திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு இலவச காஸ் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.குடிநீர், இலவச காஸ் இணைப்பு ஆகிய இரு

திருப்பூர்:நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறது; தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், இத்திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு இலவச காஸ் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.குடிநீர், இலவச காஸ் இணைப்பு ஆகிய இரு திட்டங்களின் முக்கிய நோக்கம், இல்லத்தரசிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான்.குடிநீருக்காக தவம்குறிப்பாக, குடிநீர் தேவைக்காக, நீண்ட துாரம் செல்வதும், குடிநீர் பிடிப்பதற்காக நீண்ட நேரம் குழாயடி முன்பு காத்திருப்பதும், நேரத்தை கொல்கின்றன. இதனால், பெண்கள், வேறு வருவாய்க்குரிய, ஆக்கபூர்வ விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. பொதுவாக, இத்தகைய விஷயங்களில் இருந்து ஆண்கள் பெரும்பாலானோர், விலகிவிடுகின்றனர்.எரிபொருள் தேடி...இதேபோல் கிராமங்களில், எரிபொருள் தேடி, பெண்கள் செலவிட வேண்டிய தருணங்கள் அதிகம். விறகு பொறுக்குவதற்காக அல்லது மாற்று எரிபொருளுக்காக பல மணி நேரங்களை தினமும் செலவழிக்கின்றனர். இதற்கு வரப்பிரசாதமாக இலவச காஸ் இணைப்பு திட்டம் அமைந்தது. இருப்பினும்கூட, அடுத்த சிலிண்டர் வாங்கும்போது, அதற்கு பணம் இல்லாமல், மீண்டும் பழைய எரிபொருளையே தொடரும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.தண்ணீருக்காகவிடுமுறைதிருப்பூர் போன்ற ஆண், பெண் இருபாலரும் உழைப்பை நாடிச் செல்லும் நகரங்களில், பெண்களின் உழைப்பு என்பது ஈடு இணையற்றது. குடிநீர் வினியோகத்தில் நிச்சயமின்மை, குளறுபடி, குடிநீரே கிடைக்காமை போன்றவை, இவர்கள் வேலைக்கு செல்வதில் தடையை ஏற்படுத்துகிறது. தண்ணீர் பிடிப்பதற்காக விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. தண்ணீர் வரும் என்று காத்திருந்து, தண்ணீர் வராமல் அடுத்த நாளும் பணிக்கு வராத சூழல்கள் ஏற்படுகின்றன.இது எளிய பிரச்னை போல் தோன்றினாலும், இது ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.'தண்ணீர் பிடிக்க லீவு போடலேன்னா தண்ணீ பிடிக்க முடியாது. விலைக்கு வாங்கணும்னா அதுக்கு என்னோட 2, 3 நாளு சம்பளம் தேவைப்படும்' என்று கூறுகிறார், பனியன் நிறுவன பணிக்கு செல்லும் ஒரு பெண்மணி.இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று தேர்தலின்போது, கட்சிகள் முழங்கின. இல்லத்தரசிகளுக்கு தேவையான வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்குவதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால் போதும் என்பதே முக்கியம்.ஒரு நாளில் பெண்கள், 352 நிமிடம் ஊதியம் இல்லாத வீட்டுப்பணியிலும், ஆண்களோ, 52 நிமிடம் மட்டும் ஒதுக்குகிறார்கள் என்பதும் புள்ளிவிவரம்.சுமை கூடுகிறதுகொரோனா முடக்கத்தின்போது, பெண்களுக்கு இன்னும் இந்த சுமை கூடியது.வீடுகளில் சமையல் வேலை, பாத்திரம் துலக்குதல், வீட்டை சுத்தம் செய்தல் என்பதோடு, கிராமப்புறங்களில் வீடுகளில் கால்நடை வளர்ப்பு உள்ளி்ட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். வயலில் நாற்று நடுதல், அறுவடை செய்தல், பெட்டிக்கடைகளில் அமர்ந்து பணிபுரிதல் போன்ற பணிகளிலும் தங்களை பெண்கள் ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.வீட்டு வேலைகளிலேயே அதிக நேரம் செலவிடுவதால், ஓய்வெடுத்தல், உடல் நலம் கவனித்தல், அளவளாவல், பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.சுய முன்னேற்றம், திறன் மேம்பாடு, தேவையான கல்வி, தொழிற்பயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. நேரமின்மை காரணமாக பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடிவதில்லை. வீடுகளுக்கே நேரடி குடிநீர் இணைப்பு என்பது பெண்களின் நேரத்தை பொன்னாக்குவதற்கான வாய்ப்பை தரும் என்பது நிச்சயம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X