பொது செய்தி

தமிழ்நாடு

விவேகத்தின் விலாசமாக பாலகன்! சாதனைகள் காத்திருக்கின்றன

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு...'பால் மணம் மாறாத மழலை மொழியில், திருக்குறளை அழுத்தம் திருத்தமாக சொன்ன விவேகானந்தனுக்கு, வயது 2 ஆண்டு, ஏழு மாதமாகிறது. சின்னஞ்சிறு வயதிலேயே தனது அபார நினைவாற்றலால், பழங்கள், காய்கறிகள், விலங்குகள், பறவைகள், வண்ணங்கள், உயிரினங்களின் ஒலி, தமிழ், ஆங்கில மாதங்கள், தேச தலைவர்கள் பெயர்கள் என இன்னும் ஏராளமான விஷயங்களை 'பட்... பட்'
 விவேகத்தின் விலாசமாக பாலகன்! சாதனைகள் காத்திருக்கின்றன


அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு...'பால் மணம் மாறாத மழலை மொழியில், திருக்குறளை அழுத்தம் திருத்தமாக சொன்ன விவேகானந்தனுக்கு, வயது 2 ஆண்டு, ஏழு மாதமாகிறது. சின்னஞ்சிறு வயதிலேயே தனது அபார நினைவாற்றலால், பழங்கள், காய்கறிகள், விலங்குகள், பறவைகள், வண்ணங்கள், உயிரினங்களின் ஒலி, தமிழ், ஆங்கில மாதங்கள், தேச தலைவர்கள் பெயர்கள் என இன்னும் ஏராளமான விஷயங்களை 'பட்... பட்' என கூறுகிறான்.இளம் வயதிலேயே நினைவுத்திறனில் பாண்டித்தியம் காட்டியதால், 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான். விவேகானந்தனின் தந்தை ஆனந்தபாபு, தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர். தாய் விமலா, அழகு கைவினை பொருள் தயாரித்து விற்பனை செய்கிறார்.விவேகானந்தன் குறித்து ஆனந்தபாபு சொல்கிறார்:ஒன்றரை வயதிலேயே சொன்னதை திரும்பி சொன்னான். ஆச்சர்யப்பட்ட நாங்கள், தேச தலைவர்கள், விலங்குகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் படங்கள் கொண்ட புத்தகத்தை வாங்கி கொடுத்து சொல்லி கொடுத்தோம். ஒருமுறை சொன்னாலே போதும், அடுத்த நொடியே அதை சொல்வான். 'டிவி'யில் யாராவது தலைவர்கள் தோன்றினால், அவர்களது பெயரையும் சொல்வான்.அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்கிறோம். அதற்குள்ளாக, 50 திருக்குறளை மனப்பாடமாக சொல்ல கற்று கொடுக்கிறோம். அடுத்த முயற்சியாக, 1,330 திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களையும், பாரதியார் கவிதைகளையும் பால பருவத்திலேயே கற்றுக்கொள்ள தேவையான பயிற்சியை அளிக்க முடிவு செய்துள்ளோம்.கடவுள் அருளால், சொல்லாற்றல், நினைவாற்றல் கொண்டுள்ள விவேகானந்தனுக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுத்த நல் ஆசானாக உருவாக்குதே எங்கள் லட்சியம்.மகனைப் பற்றி சொல்லும் ஆனந்தபாபுவின் வார்த்தைகளில் நம்பிக்கை நர்த்தனமாடுகிறது.ஒன்றிரண்டு பொருட்கள் வாங்க, மளிகைக்கடை சென்று, அவற்றை மறந்து விட்டு, அலைபேசியில், 'அம்மா, என்ன வாங்கிட்டு வரச்சொன்னீங்க...' என கேட்கும் சிறுவர்கள் மத்தியில், விவேகானந்தன் இந்த வயதிலேயே பெயருக்கு ஏற்றவாறு திகழ்வது உண்மையிலேயே வியப்பூட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202115:33:55 IST Report Abuse
Ram Pollachi கிளிப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X