பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரத்தில் 2,480 பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர்;கூடுதல் தடுப்பூசி மருந்து ஒதுக்கப்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 24 மணி நேரத்தில், 2,480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, அரசுப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, அந்தந்த பகுதியை சேர்ந்த வாக்காளர் மட்டும், முகாமில் தடுப்பூசி போட்டு
 24 மணி நேரத்தில் 2,480 பேருக்கு தடுப்பூசி

திருப்பூர்;கூடுதல் தடுப்பூசி மருந்து ஒதுக்கப்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 24 மணி நேரத்தில், 2,480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, அரசுப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, அந்தந்த பகுதியை சேர்ந்த வாக்காளர் மட்டும், முகாமில் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் வசதிக்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருகிறது. மாவட்டத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என, 71 அரசு மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.தனியார் அரசு மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில், 18 இடங்களில் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில், நேற்று மதியம் 3:00 மணி நிலவரப்படி, 11 லட்சத்து, 56 ஆயிரத்து, 794 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 651 பேர் மட்டும் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில், 52 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சியின், 34 மையங்களில், 17 ஆயிரம் 'டோஸ்' தடுப்பூசி ஒதுக்கப்பட்டிருந்தது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில மக்கள், அரசு மருத்துவமனைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களை பொறுத்தவரை, அந்தந்த வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மட்டுமே, தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும். தனியார் மையம் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், வெளியாட்களுக்கு தடுப்பூசி போட்டனர்.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்றிரவு வரையில், 24 மணி நேரத்தில், 2,480 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X