நகராட்சியுடன் இணைகிறதா பழங்கரை?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியுடன் இணைகிறதா பழங்கரை?

Added : ஆக 29, 2021
Share
அவிநாசி:திருமுருகன்பூண்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து, அதன் எல்லைகளை விரிவுப்படுத்த திட்டம் தயாராகி வருகிறது எனக் கூறப்படுகிறது.இதற்கிடையில், திருமுருகன்பூண்டி பேரூராட்சியை ஒட்டியுள்ள, அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழங்கரை ஊராட்சியை, நகராட்சி எல்லைக்குள் கொண்டு வர, ஊராட்சி

அவிநாசி:திருமுருகன்பூண்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து, அதன் எல்லைகளை விரிவுப்படுத்த திட்டம் தயாராகி வருகிறது எனக் கூறப்படுகிறது.இதற்கிடையில், திருமுருகன்பூண்டி பேரூராட்சியை ஒட்டியுள்ள, அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழங்கரை ஊராட்சியை, நகராட்சி எல்லைக்குள் கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.ஊராட்சி தலைவர் கோமதி தலைமையில் ஊராட்சி அவசரக்கூட்டம் நடத்தப்பட்டது.தமிழகத்தில் நகர்ப்புறங்களில், அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாகவும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பழங்கரை ஊராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த, அரசுக்கு கருத்துரு அனுப்ப, அங்கீகாரம் வழங்கப்படுகிறது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.'இந்த தீர்மானம் அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழுவின் அங்கீகாரத்துக்கு பின், எம்.எல்.ஏ. வின் ஒப்புதலுடன், மக்களின் கருத்துக்கேட்புக்கு வைக்கப்படும். அதில் ஒப்புதல் கிடைத்ததும், நகராட்சியுடன் இணைக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X