போக்குவரத்து இடையூறு; சிக்னல் அருகே சிக்கல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் அருகே பயணிகளை ஏற்றி, இறக்க நிறுத்தப்படும் பஸ்களால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.திருப்பூர் காமராஜ் ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் தற்போது புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து யுனிவர்சல் தியேட்டர் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது.இங்கிருந்து புறப்படும் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலைக்
 போக்குவரத்து இடையூறு; சிக்னல் அருகே சிக்கல்

திருப்பூர்:எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் அருகே பயணிகளை ஏற்றி, இறக்க நிறுத்தப்படும் பஸ்களால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.திருப்பூர் காமராஜ் ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் தற்போது புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து யுனிவர்சல் தியேட்டர் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது.இங்கிருந்து புறப்படும் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலைக் கடந்து பார்க் ரோடுக்கும், நொய்யல் பாலத்தைக் கடந்து தெற்கு பகுதிக்கும் செல்கிறது.தற்போது பஸ் ஸ்டாண்ட் இங்கு இயங்குவதால் எந்நேரமும் வாகனப் போக்குவரத்தும், பஸ்சுக்குச் சென்று வரும் பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்படுகிறது.இந்நிலையில், வடக்கு நோக்கிச் செல்லும் பஸ்கள் நொய்யல் பாலம் மீது நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. அதே போல், வடக்கிலிருந்து வரும் மினி பஸ் மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் டவுன் பஸ்களும், சிக்னலைக் கடந்து நொய்யல் பாலம் மீது நின்று செல்கிறது.இது போன்ற சமயங்களில் பயணிகள் பஸ் ஏறி இறங்கச் சிரமப்படுகின்றனர். மேலும் நிற்கும் பஸ்களைத் தொடர்ந்து வரும் பிற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.நொய்யல் பாலம் மீது சிலர் கடைகள் பரப்பி வைத்துள்ளனர். இதனால், நடைபாதையில் நடக்க வழியின்றி பொதுமக்கள் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், பாதசாரிகள் கூட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய அவதி வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X