பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதிபாளையத்தில் இனி, கால்நடை சந்தை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் கால்நடை சந்தை, கோவில்வழி - அமராவதிபாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, நாளை முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.திருப்பூர் நகரப்பகுதியான, தென்னம்பாளையத்தில் கால்நடை சந்தை இயங்குகிறது. திங்கட் கிழமை தோறும் கால்நடை சந்தை இயங்குவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே, சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.கொரோனா

திருப்பூர்;திருப்பூர் கால்நடை சந்தை, கோவில்வழி - அமராவதிபாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, நாளை முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.திருப்பூர் நகரப்பகுதியான, தென்னம்பாளையத்தில் கால்நடை சந்தை இயங்குகிறது. திங்கட் கிழமை தோறும் கால்நடை சந்தை இயங்குவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே, சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.கொரோனா ஊரடங்கால், கடந்த ஏப்., மாதத்தில் இருந்து, கால்நடை சந்தை மூடப்பட்டது. இந்நிலையில், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில், மூன்று ஏக்கர் கால்நடை சந்தைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஒன்றரை கி.மீ., தொலைவில், மாநகராட்சியின், 36வது வார்டில் புதிய கால்நடை சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கால்நடை சந்தை, நாளை முதல் (30ம் தேதி) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, கால்நடை சந்தை, அமராவதிபாளையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 30ம் தேதி முதல், பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. திங்கள்தோறும், காலை, 11:30 முதல், மாலை, 4:00 மணி வரை சந்தை செயல்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X