பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் அறக்கட்டளை தலைவருக்கு பாராட்டு

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், லட்சுமி நகர் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் அறக்கட்டளை தலைவர் குப்பாத்தாளுக்கு பாராட்டு விழாவும், சதாபிேஷக விழாவும் நடந்தது.லட்சுமி நகரில் சிதிலமடைந்த நிலையில் இருந்த ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணி நடக்காமல் இருந்தது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அறக்கட்டளை உருவாக்கி, முழுவதும் பெண்களால், கோவில் திருப்பணி

திருப்பூர்:திருப்பூர், லட்சுமி நகர் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் அறக்கட்டளை தலைவர் குப்பாத்தாளுக்கு பாராட்டு விழாவும், சதாபிேஷக விழாவும் நடந்தது.லட்சுமி நகரில் சிதிலமடைந்த நிலையில் இருந்த ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணி நடக்காமல் இருந்தது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அறக்கட்டளை உருவாக்கி, முழுவதும் பெண்களால், கோவில் திருப்பணி நடந்து, ஒரே ஆண்டில் கோவில் கட்டி, கும்பாபிேஷகம் நடந்தது.அறக்கட்டளை தலைவராக இருப்பவர் குப்பாத்தாள். இவரது கணவர் சின்னசாமி. இந்த தம்பதியினரின் சதாபிேஷக விழா நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த விழாவில், அறக்கட்டளை தலைவர் குப்பாத்தாளுக்கு பாராட்டு விழாவும், சதாபிேஷக விழாவும் நடந்தது. இதையொட்டி, ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.இதில், அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர், சதாபிேஷகம் கொண்டாடிய தம்பதியரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202115:29:52 IST Report Abuse
Ram Pollachi மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X